2019ம் ஆண்டின் முதல் பெரிய படங்களாக ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படமும், அஜித் குமார் நடித்த ‘விஸ்வாசம்’ படமும் ஜனவரி 10ம் தேதி ஒரே நாளில் வெளியாகின.
வெளியான நாளிலிருந்தே எந்தப் படம் சிறந்த படம், எந்தப் படம் அதிக வசூலை அள்ளிய படம் என ரஜினி, அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் சண்டை போட்டுக் கொண்டனர்.
‘விஸ்வாசம்’ படத்தை வெளியிட்ட கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் படம் வெளியான சில நாட்களிலேயே ரஜினிகாந்த்தின் பிஆர்ஓ ரியாஸ் அகமது பதிவிட்ட டிவிட்டர் பதிவிற்கு எதிர்மறையான கருத்தை வெளியிட்டு சண்டை போட்டது.
Dear sir,
People of Tamil Nadu & theatre owners know the truth. Why should you try to create an unnecessary competition & conflict? Please refer to TN box office collections so far for clarity. Let’s see how both our films pan out… Peace✌️#Viswasam— KJR Studios (@kjr_studios) January 12, 2019
அன்றிலிருந்து ரஜினி ரசிகர்களுக்கும், அஜித் ரசிகர்களுக்கும் கடுமையான சண்டை சமூக வலைத்தளங்களில் நடைபெற்று வருகிறது.
எந்தப் படம் முதலில் 100 கோடி வசூலைப் பெற்றது, எந்தப் படம் தமிழ்நாட்டில் அதிகம் வசூலித்தது, எந்தப் படம் உலக அளவில் அதிகம் வசூலித்தது என இருவரது ரசிகர்களும் சண்டையிட்டு வந்தனர்.
அதற்கடுத்த சில நாட்களில் ‘பேட்ட’ தயாரிப்பாளரான சன் பிக்சர்ஸ் வெளியிட்ட மற்றுமொரு டிவீட்டும் மீண்டும் மோதலை ஆரம்பித்தது.
Here is the AUTHENTIC #Petta BO report : Veteran distributor Tirupur Subramaniam states that from this Sunday, #Petta will become the FIRST Tamil film to cross 100 crores in 11 days in Tamil Nadu ALONE.#PettaFastest100CrsInTNhttps://t.co/ETacAJY8bv@karthiksubbaraj
— Sun Pictures (@sunpictures) January 17, 2019
இன்று இந்த இரண்டு படங்களின் 100 வது நாள் என சம்பந்தப்பட்டவர்கள் டிவிட்டரில் நன்றி தெரிவித்தனர். அதற்கும் இருவரது ரசிகர்களும் சண்டையிட ஆரம்பித்துள்ளனர்.
‘பேட்ட’ படத்தை சில தினங்களுக்கு முன்பு டிவியில் ஒளிபரப்பிவிட்டார்கள். ‘விஸ்வாசம்’ படத்தை 50வது நாளிலேயே அமேசான் ஆப்பில் வெளியிட்டுவிட்டார்கள். அது குறித்தும் அவர்களின் சண்டையில் கருத்து மோதல்கள் உள்ளன.
அதே சமயம், ‘பேட்ட, விஸ்வாசம்’ ஆகிய இரண்டு படங்களும் இன்று 100வது நாளில் எந்தத் தியேட்டரில் ஓடிக் கொண்டிருக்கிறது என இருவரும் மாறி மாறி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
SAI SAI 🙏🏻🙏🏻🙏🏻thank u Thala Ajith sir Thala fans ,Nayanthara mam,jagabathi sir ,all the actors entire crew ,media friends ,cinema lovers, family audience,Sathyajothi films ,my team,all the people who love us 🙏🏻🙏🏻🙏🏻THANK U GOD for this wonderful blessing inspiring success🙏🏻🙏🏻🙏🏻 pic.twitter.com/0eZVfme7jU
— siva+director (@directorsiva) April 19, 2019
BIG Thanks to all #Thalaivar fans & audience for the love shown to #Petta & gifting us a blockbuster success 🙏
So happy it's #100daysofMaranaMassPetta
Huge thanks & loads of love to you Thalaivaa from #Petta team 🙏@sunpictures @anirudhofficial @DOP_Tirru #100DaysOfBBPETTA pic.twitter.com/Kf7JrQHczo
— karthik subbaraj (@karthiksubbaraj) April 19, 2019