சூப்பர் சிங்கர் 6 ஜுனியர், முதல் பரிசு வென்ற ரித்திக்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் ஜுனியர் சீசன் 6 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி நேற்று சென்னையில் நடைபெற்றது.

ரித்திக், அனுஷ்யா, சின்மயி, பூவையார், சூர்யா, அஹானா ஆகிய 6 பேர் இறுதிப் போட்டியில் பங்கேற்றனர்.

இவர்களில் சூர்யா, அஹானா இருவரும் வைல்டு கார்ட் நுழைவு மூலம் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தனர்.

நேற்று நடந்த இறுதிப் போட்டியில் ரித்திக் முதலிடத்தைப் பெற்று 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீட்டைப் பரிசாகப் பெற்றார்.

இரண்டாவது இடத்தை சூர்யா வென்று 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள வைர நகைகளை பரிசாக வென்றார்.

பூவையார் மூன்றாவது இடத்தைப் பெற்று 10 லட்ச ரூபாயை பரிசாகப் பெற்றார்.

இந்நிகழ்ச்சியின் நடுவர்களாக பின்னணிப் பாடகர்கள் சங்கர் மகாதேவன், எஸ்பிபி சரண், பாடகிகள் சித்ரா, கல்பனா ஆகியோர் இருந்து போட்டியாளர்களை நெறிப்படுத்தினர்.

நேற்றைய இறுதிப் போட்டியில் ஆயிரக்கணக்கான ரசிகர்களும், விஜய் டிவி பிரபலங்கள், பின்னணிப் பாடகர்கள், பாடகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Read Previous

மெஹந்தி சர்க்கஸ் – இந்த வாரத்தின் நம்பர் 1 படம்

Read Next

ஷங்கர் 25 கொண்டாட்டம் – வசந்தபாலன் உருக்கம்