தமிழரசன் – இளையராஜா இசையில் பாடிய எஸ்பிபி

எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் ‘தமிழரசன்’.

பாபு யோகேஸ்வரன் இயக்கும், இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்க, நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.

இளையராஜா இசையமைக்கும் இந்தப் படத்திற்காக எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடும் ஒரு பாடல் இன்று பதிவு செய்யப்பட்டது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இளையராஜா இசையில் எஸ்பிபி பாடியுள்ள பாடல் இது.

கடந்த வருடம் ராயல்டி விவகாரத்தில் பிரிந்த இளையராஜா, எஸ்பிபி மீண்டும் நாளை நடைபெற உள்ள இளையராஜாவின் பிறந்தநாள் கொண்டாட்ட இசை நிகழ்ச்சிக்காக ஒன்று சேர்ந்துள்ளார்கள்.

இந்தப் படத்திற்காக சில வாரங்களுக்கு முன்பு கேஜே யேசுதாஸ் ஒரு பாடலைப் பாடினார். இப்போது எஸ்பி பி பாடியுள்ளார்.

பழனி பாரதி எழுதிய, ‘வா வா என் மகனே’ என்ற தாலாட்டுப் பாடல்தான் இன்று பதிவானது. இந்தப் பாடலும் மிகச் சிறப்பாக வந்துள்ளது, பெரிய ஹிட்டாகும் என படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்.

படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக் கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

Read Previous

காஞ்சனா ஹிந்தி ரீமேக்கை இயக்க ராகவா லாரன்ஸ் சம்மதம்

Read Next

ரௌடி பேபி – ஐந்தே மாதங்களில் 500 மில்லியன் சாதனை