உண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில், பாலாஜிமோகன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், தனுஷ், சாய் பல்லவி, வரலட்சுமி மற்றும் பலர் நடிக்க கடந்த வருடம் டிசம்பர் மாதம் 21ம் தேதி வெளிவந்த படம் ‘மாரி 2’.
அந்தப் படத்தில் தனுஷ் எழுதி தீ-யுடன் இணைந்து பாடிய ‘ரௌடி பேபி’ பாடல் வெளியான நாளிலிருந்தே சூப்பர் ஹிட்டானது.
யு டியுபில் வெளியிடப்பட்ட அதன் லிரிக் வீடியோ ரசிகர்களை வெகுவாக் கவர்ந்தது. பின்னர் ஜனவரி 2ம் தேதியன்று அதன் வீடியோ பாடலை யு டியுபில் வெளியிட்டார்கள்.
சரியாக ஐந்து மாதங்களில் யு டியுபில் அந்தப் பாடல் 500 மில்லியன், அதாவது 50 கோடி பார்வைகளைப் பெற்று புதிய சாதனையைப் படைத்துள்ளது.
தென்னிந்தியத் திரையுலகில் ஒரு சினிமா பாடல் 500 மில்லியன் சாதனையைப் புரிவது இதுவே முதல் முறை.
இந்திய அளவில் ஹிந்திப் பாடல்கள் மட்டும்தான் 500 மில்லியன் சாதனைகளைப் புரிந்துள்ளன. இதுவரையில் 9 ஹிந்திப் படப் பாடல்கள் 500 மில்லியனைக் கடந்திருக்கின்றன.
தற்போது தமிழ்த் திரைப்படப் பாடலான ‘ரௌடி பேபி’ அந்த 500 மில்லியன் கிளப்பில் இணைந்து டாப் 10 இடத்திற்குள் நுழைந்துள்ளது.
ரௌடி பேபியின் இந்த 500 மில்லியன் சாதனை குறித்து சமூக வலைத்தளத்தில் போஸ்டரைப் பகிர்ந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் தனுஷ்.
ரௌடி பேபி 500 மில்லியன் கடந்து வந்து பாதை…
500 மில்லியன் பார்வைகள் – 152 நாட்கள்
450 மில்லியன் பார்வைகள் – 127 நாட்கள்
400 மில்லியன் பார்வைகள் – 107 நாட்கள்
350 மில்லியன் பார்வைகள் – 88 நாட்கள்
300 மில்லியன் பார்வைகள் – 71 நாட்கள்
250 மில்லியன் பார்வைகள் – 55 நாட்கள்
200 மில்லியன் பார்வைகள் – 42 நாட்கள்
150 மில்லியன் பார்வைகள் – 31 நாட்கள்
100 மில்லியன் பார்வைகள் – 18 நாட்கள்
https://youtu.be/x6Q7c9RyMzk