விஜய் 63 – ஏஆர் ரகுமான் புது தகவல்

எஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், விஜய், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் விஜய்யின் 63வது படம் பற்றி ஏஆர் ரகுமான் புது தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

படத்திற்காக அவர் இசையமைத்துக் கொடுத்த 2 பாடல்களின் ‘எடிட்’ வடிவத்தைப் பார்த்ததாக அவர் தெரிவித்துள்ளார். ‘அதை முதலில் பார்த்தது நான்தான்’ என்று ஸ்மைலி போட்டு மகிழ்ச்சியுடன் அதை டிவிட்டரில் பகிர்ந்திருக்கிறார்.

இயக்குனர் அட்லீ அந்த இரண்டு பாடல்களையும் ரகுமானின் ஸ்டுடியோவிற்குச் சென்று போட்டு காட்டியிருக்கிறார்.

‘மெர்சல், சர்க்கார்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் படத்திற்கு ரகுமான் மீண்டும் இசையமைக்கிறார்.

ஒரு முன்னணி ஹீரோவின் அடுத்தடுத்து மூன்று படங்களுக்கு ரகுமான் இசையமைப்பது இதுவே முதல் முறை.

Read Previous

Nenjamundu Nermaiyundu Odu Raja – Trailer

Read Next

இன்று ஜுன் 5, 2019 வெளியான படம் – 7