வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், தனுஷ், மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடிக்கும் ‘அசுரன்’ படத்தின் இசை வெளியீடு இன்று சென்னையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனுஷ் பேசுகையில்,
இந்தப் படம் ஒரு முக்கியமான படமா எனக்கு நிச்சயமா இருக்கும்னு நான் ரொம்ப நம்பறேன். ரொம்ப என்ஜாய் பண்ணி, ரொம்ப பிடிச்சி, ரொம்ப இன்வால்வ் பண்ணி நான் பண்ண படம்.
அதுக்கு வெற்றிமாறனும் அவருடைய குழுவோட உழைப்பும் சாதாரண உழைப்பு இல்லை. அவ்வளவு தூரம் உழைச்சி, எங்களுக்கு நல்ல பிளாட்பார்ம் கொடுத்திருக்காங்க. இந்தப் படத்துல ஒரு பங்கா இருக்கிறது பெருமை.
மஞ்சு வாரியர் ரொம்ப வருட காலமா நல்ல தோழி. அதைத் தாண்டி திறமைசாலியா அவங்களை ரொம்ப பிடிக்கும். அவங்க கூட சேர்ந்து நடிக்கணும்னு ஆசையா இருந்துச்சி. அது இந்தப் படத்தின் மூலமா நடந்திருக்கு.
‘காதல் கொண்டேன்’ படம் சமயத்துல நாகேஷ் சார் கூட நிறைய பேசற சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு. எனக்கு எதிர்ல நடிக்கிறவங்களப் பார்த்து, சார் பயங்கரமா நடிக்கிறாங்க சார்னு சொல்வேன். அப்ப எனக்கு 18 வயசு இருக்கும். அவர் சொன்னாரு, உன் எதிர்ல யாரு பயங்கரமா நடிக்கிறாங்கன்னு தெரியுதோ அது சுமாரான நடிப்புதான். யாரு நடிக்கலைன்னு தெரியுதோ அதுதான்டா பெரிய நடிப்புன்னு நாகேஷ் சார் சொன்னாரு. அப்படி பார்த்து பயப்பட வேண்டிய நடிகை மஞ்சு வாரியர். அவங்கநடிக்கிறதே தெரியாது.
ஜிவி பிரகாஷ்குமார் கூட வொர்க் பண்றது ஜாலியா இருக்கும். மண் சார்ந்த இசை இப்படத்திற்கு கொடுத்திருக்கிறார்.
வடசென்னை தான் வெற்றிமாறனின் பெஸ்ட் என்று நினைத்தேன். ஆனால் அசுரன் தான் அவரின் பெஸ்ட்டாக இருக்கும்.
மக்கள் தான் வடசென்னைக்கு தேசியவிருது கிடைக்கவில்லை என்று வருத்தப்படுகிறார்கள். நானும் வருத்தப்பட்டேன்தான். 2010லயே நானும், வெற்றிமானும் வாங்கிட்டோம்.
பரியேறும் பெருமாள், மேற்குத் தொடர்ச்சி மலை, ராட்சசன், பேரன்பு இப்படி பல படங்களுக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தமா இருக்கு.
விருது கிடைச்சதும் குதிச்சதும் கிடையாது. கிடைக்கலன்னு துடிச்சதும் கிடையாது. விருதுக்காக படமெடுக்கிறதில்லை. மக்களுக்குப் பிடிச்சிருக்கு, அதுவே எங்களுக்குக் கிடைத்த கௌரவம்,” என்றார்.