எஸ்எஸ்ஆர் என்டர்டெயின்மென்ட் சார்பில் கேஐ சுரேஷ் தயாரிப்பில், கவின் மூர்த்தி எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘மைலோ’. முகேன் ராவ் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தின் டைட்டில் மற்றும் முதல் பார்வை போஸ்டரை படக்குழு வெளியிட்டுளளது.
18 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒரு குற்றத்தையும், ‘மைலோ’ என்ற செல்ல நாயையும் மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைந்துள்ளது. அந்தக் குற்றத்தின் பின்னணியில் மறைந்திருக்கும் உண்மையைச் செல்ல நாயின் உதவியுடன் நாயகன் எவ்வாறு கண்டறிகிறார் என்பதே படத்தின் மையக்கரு. மர்மம், திருப்பங்கள் மற்றும் கமர்ஷியல் அம்சங்களுடன் இப்படம் உருவாகியுள்ளது.
முகேன் ராவுடன் தேஜு அஸ்வினி, இளவரசு, முனீஷ்காந்த், பிக் பாஸ் புகழ் ஜனனி, இந்திரஜா, சுரேஷ் மேனன், ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்திரஜா சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் நடித்துள்ளார்.
சென்னை, ஊட்டி, கொல்லிமலை, மூணாறு, திருவனந்தபுரம், மலேசியா உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ஜென் மார்ட்டின் இசையமைக்க, ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். வெங்கட் ராஜன் படத்தொகுப்பையும், உமா சங்கர் – ஜெயமுருகன் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர். கவின் மூர்த்தி, சந்திரன் வசனங்களை எழுதியுள்ளனர். ஏ. ராஜா இணை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.
‘மைலோ’ படத்தின் இசை வெளியீடு மற்றும் திரையரங்க வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளிக உள்ளது.