சோனி விழா டிவியில் சமந்தா நிகழ்ச்சி

உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற சமையல் நிகழ்ச்சியான ‘மாஸ்டர் செப்’ நிகழ்ச்சி தமிழர்களின் உணர்வுகளோடும் சுவைகளோடும் புதிய வடிவில் உருவாக உள்ளது.

நடிகை சமந்தா முன்னிலையில் தமிழ்த் திரையுலகம் மற்றும் பொழுதுபோக்கு துறையின் முன்னணி பிரபலங்கள் பலர் ஒன்றிணைந்து உணவு, சுவை, உணர்வு மற்றும் கொண்டாட்டத்தை பகிர்ந்துகொள்ளும் வகையில் ‘செலிபிரிட்டி மாஸ்டர் செப் தமிழ்’, சோனி விழா மற்றும் சோனி லைவ்-ல் ஒளிபரப்பாக உள்ளது.

சோனி விழா-வின் முக்கிய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஒன்றாக இந்த நிகழ்ச்சி இடம் பெற உள்ளது. மேலும் சோனி லைவ் மற்றும் டிஜிட்டல் தளங்களில் பிரத்யேக குறும்படங்கள் மற்றும் சிறப்பு உள்ளடக்கங்கள் வெளியாகும். இதன் மூலம் பிரபலங்களின் சமையல் பயணம் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் சமையலறையில் நிகழும் மறக்க முடியாத தருணங்களை ரசிகர்கள் காண முடியும்.

நிகழ்ச்சி குறித்து சமந்தா கூறுகையில்,

“இந்த நிகழ்ச்சியை அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றேன்…நான் இதுவரை செய்தவற்றிலிருந்து முற்றிலும் வேறுவகையில் இருக்கிறது Celebrity MasterChef Tamil..அதுதான் இந்த நிகழ்ச்சிக்கு ‘வேண்டாம்’ என்று சொல்ல முடியாத அளவுக்கு என்னை வெகுவாக ஈர்த்தது.

உணவு என்பது மக்களை ஒன்றிணைக்கும், அழகான நினைவுகளை உருவாக்கும், கேமராக்கள் வழக்கமாக நமக்குக் காட்டாத நம்முடைய ஒரு பக்கத்தை வெளிப்படுத்தும் அற்புதமான ஆற்றல் கொண்டது. நமக்குப் பிடித்த தமிழ் பிரபலங்கள் சமையலறைக்குள் வந்து புதிய முயற்சிகளை எடுத்து, தவறுகளைச் செய்து தங்களையே ஆச்சரியப்படுத்தி நாம் எதிர்பார்ப்பதைவிட அதிக ஆர்வத்துடனும் உணர்வுடனும் போட்டியிடுவதைப் பார்ப்பதற்காக நான் மிகவும் ஆவலுடன் இருக்கின்றேன்..

யார் யார் சமைக்கப் போகிறார்கள் என்று சொல்ல வேண்டும் என்று ஆசையாக இருக்கிறேன்… ஆனால், அதை இப்போதே சொல்லிவிட்டால் சுவாரஸ்யம் எங்கே இருக்கும்.. சோனி விழா உடன் நாங்கள் என்ன சமைத்து வைத்திருக்கிறோம் என்பதை அனைவரும் பார்ப்பதற்கு என்னால் காத்திருக்க முடியவில்லை,” என்றார்.

Read Previous

திரையுலகில் 51 ஆண்டுகள் கடந்த ரஜினிகாந்த்