சரத்குமார் நடிக்கும் 171வது திரைப்படத்தை ஸ்ரீ ராஜலட்சுமி ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் பி.எல். தேனப்பன், மற்றும் பிரெசிடென்ஷியல் மூவீஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் அனுப் மோகன் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இதற்கு முன்னதாக பி.எல்.தேனப்பன் தயாரித்த ‘திவான்’ படத்தில் நாயகனாக நடித்துள்ளார் சரத்குமார். சுமார் 20 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைகிறார்கள்.
கமல்ஹாசன் நடித்த ‘காதலா காதலா, பம்மல் கே சம்பந்தம், பஞ்ச தந்திரம்’, சிம்பு நடித்த ‘வல்லவன்’, மம்முட்டி நடித்த ‘பேரன்பு’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்திருக்கிறார் பிஎல் தேனப்பன்.
இந்தப் படத்தை ராகுல் சக்கரவர்த்தி இயக்குகிறார். கதையை விஜய் பார்கவ் எழுதியுள்ளார். பி.ஆர்.ஓ. ஆதிரா தில்ஜித், தமிழ் மார்க்கெட்டிங் – சரண், தமிழில் PRO – சதிஷ் (AIM) ஆகியோர் பணியாற்றுகின்றனர்.
படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 15 அன்று தொடங்கும் என படக்குழு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.