‘பென்ஸ்’ படப்பிடிப்பில் இணைந்த ரவி மோகன்

பேஷன் ஸ்டுடியோஸ், ஜி ஸ்குவாட், தி ரூட் புரொடக்ஷன் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் வழங்கும், பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில், ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘பென்ஸ்’.

‘ரெமோ, சுல்தான்’ பங்களை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இந்தப் படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதி இயக்க, கதை எழுதி இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் வழங்குகிறார். கதாநாயகியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். 

‘டியூட், கருப்பு’ படங்களுக்கு இசையமைத்த சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். அவர் இசையமைப்பாளராக முதன் முதலில் ஒப்பந்தமான படம் ‘பென்ஸ்’ என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.

இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ரவி மோகன் ஒப்பந்தமாகி இருந்தார். அவர் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். இது பற்றிய தகவலை லோகேஷ் கனகராஜ் அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

படத்தின் நாயகன் ராகவா லாரன்ஸ் அவரை வரவேற்றுப் பதிவிட்டுள்ளார். ரவி மோகனின் வருகை இந்தப் படம் மீதான புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

அண்டர் 18 – படத்துவக்க விழா

Read Next

அந்தரன் – பத்திரிகையாளர் சந்திப்பு