தமிழ்த் திரையுலகத்தில் பாரம்பரிம் மிக்க திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஏவிஎம் தயாரிப்பு நிறுவனம். அதை நிறுவிய ஏவி மெய்யப்பச் செட்டியார் மகன் ஏவிஎம் சரவணன் உடல் நலக் குறைவால் இன்று டிசம்பர் 4, அதிகாலை காலமானார்.
நேற்று டிசம்பர் 3 அன்று தான் தனது பிறந்தநாளைக் கொண்டாடியிருந்த ஏவிஎம் சரவணன். அவரது தந்தையார் மறைவுக்குப் பிறகு அந்த நிறுவனத்தின் மூலம் தனது சகோதரர்களுடன் இணைந்து எண்ணற்ற படங்களைத் தயாரித்தார்.
அவரது உடல் இன்று மாலை 3.30 மணி வரை, ஏ.வி.எம். ஸ்டுடியோஸ், மூன்றாம் தளத்தில் பொதுமக்கள், உறவினர்கள், தொழில்துறை நண்பர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதி ஊர்வலம் மாலை 4.00 மணியளவில் புறப்பட்டு ஏ வி எம் ஸ்டுடியோ பின்புறம் உள்ள மயானத்தில் இறுதி நிகழ்வுகள் நடைபெறும்.
அவரது மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.