வளர்ந்து வரும் இசையமைப்பாளர் ஜோகன் சிவனேஷ்

ஜோகன் சிவனேஷ் தமிழ்நாட்டின் சென்னையில் இசைப் பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர்.

9 வயது முதலே  கீபோர்டு இசைக்கப் பழகினார். பின் ஏ.ஆர். ரஹ்மானின் தற்போதைய கே.எம். கன்ஸர்வேட்டரி அன்று ‘வாப்பா’ கன்ஸர்வேட்டரி என்ற பெயரில் செயல்பட்டு வந்த இசைப்பள்ளியில்  சவுண்ட் இன்ஜினீயரிங் படித்தார். மறுபுறம் முன்னனி இசைக் குழுக்களில் கீபோர்டு வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இதனால் பாடகர் எஸ். பி. பாலசுப்பிர மணியம் முதல் இளையராஜா வரை பல இசை மேதைகளோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. 2008 ஆம் ஆண்டு இளையராஜாவின் ராஜா ஒன் மேன் ஷோ நிகழ்ச்சியில் கீபோர்டு  வாசித்தார் .

2012 ஆம் ஆண்டு முதல் முறையாக ‘கொள்ளைக்காரன்’ படத்துக்காக இசையமைத்தார். அதைத் தொடர்ந்து இவர் இசையமைத்த ‘மெட்ரோ’ படம் திரையுலகில் பெரும் வரவேற்பையும் ரசிகர்களிடம் தனி இடத்தையும் தந்தது. 

தொடர்ந்து ‘ஆள், உரு, அகடு, ஆயிரம் பொற்காசுகள், ஒயிட் ரோஸ்’, கன்னடப் படமான ‘கப்பட்டி’ ஆகிய படங்களுக்கும் இசையமைத்துளளார். கடந்த வாரம் வெளியான ‘ராபர்’ படம் தனது சிறந்த இசையைக் கொடுத்துள்ளார்.

‘ராபர்’ படத்தில் இவரது பின்னணி இசை படம் பார்த்த மக்களிடையே   கவனத்தை ஈர்த்து, பெரிதளவில் பேசப்படுகிறது . மேலும் பல படங்களுக்கு தற்போது இசையமைத்து வருகிறார் .

Read Previous

மூன்று கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளும் ‘டெஸ்ட்’ – இயக்குனர் சசிகாந்த்

Read Next

கதையின் நாயகனாக கேபி ஜெகன் நடிக்கும் ‘ரோஜா மல்லி கனகாம்பரம்’

Most Popular