நடிகர் சூர்யா துவங்கி வைத்த,  இயக்குநர் ஹரியின் புதிய ஸ்டூடியோ!

திரைத்துறை பணிகளான ரெக்கார்டிங், டப்பிங், எடிட்டிங் பணிகளை நவீன வசதிகளுடன்  திறம்பட செய்யும் புதிய குட்லக் ஸ்டூடியோவை இயக்குநர் ஹரி மற்றும் ப்ரீதா ஹரி துவங்கியுள்ளனர். தமிழின் பெரும் அரசியல் ஆளுமைகள் கலந்துகொண்ட இவ்விழாவில் நடிகர் சூர்யா, தமிழ் நாடு சட்டப்பேரவை தலைவர்  
மாண்புமிகு எம்.அப்பாவு எம்.எல் .ஏ ,தமிழக அமைச்சர்கள் மாண்புமிகு 
அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் mla, மாண்புமிகு அமைச்சர் பி.கே.சேகர் பாபு mla, 
மாண்புமிகு அமைச்சர் டி.மனோ தங்கராஜ் mla, டைரக்டர் ஹரி தந்தை கோபாலகிருஷ்ணன், ஹரியின் மாமனார் நடிகர் விஜயகுமார், ரிய ஹரி, ஶ்ரீதேவி விஜயகுமார் ஆகியோர் குத்துவிளக்கேற்றினார்கள். புதிய ஸ்டூடியோவை தமிழ் நாடு சட்டப்பேரவை தலைவர்  மாண்புமிகு எம். அப்பாவு எம்.எல்.ஏ தலைமையில் நடிகர் சூர்யா ரிப்பன் கட் செய்து துவக்கி வைத்தார். மற்றும் டைரக்டர் எஸ்.பி.முத்துராமன், ஆர்.வி.உதயகுமார், செந்தில்நாதன், தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தர பாண்டியன், எஸ்.ஆர்.பிரபு, மோகன் நடராஜன், எம்.எஸ். முருகராஜ், கார்த்திக் சந்தாணம், எடிட்டர் ஆண்டனி, ஒளிப்பதிவாளர் கோபிநாத், சுகுமார், ஶ்ரீதர்,  நடிகர் தலைவாசல் விஜய், நடிகை நிக்கி கல்ராணி, இயக்குனர் கார்த்திக் ராஜா, இயக்குனர் அலெஸ் பாண்டியன், நடிகர் சௌந்தர்ராஜா, நடிகர் ராஜேஷ், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், ஓ.ஏ.கே.சுந்தர், ஶ்ரீதேவி விஜயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 
 

Read Previous

“பாபா பிளாக்‌ ஷீப்” படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த சூரி!

Read Next

ராஷ்மிகா மந்தனா நடிப்பில் ட்ரீம் வாரியர் தயாரிப்பில் உருவாகும் “ரெயின்போ”!