நடிகர் விவேக் மறைவு, திரையுலகினர், ரசிகர்கள் அதிர்ச்சி

நகைச்சுவை நடிகர் விவேக் இன்று அதிகாலை சென்னையில் உடல் நலக்குறைவால் காலமானார், அவருக்கு வயது 59-

நேற்று காலை திடீரென மாரடைப்பு வந்த காரணத்தால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

அவரது திடீர் மறைவு திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் கூட கொரானோ தடுப்பூசி போட்டுக் கொண்டு மக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மீது தீவிர பற்று கொண்டவரான விவேக், லட்சக்கணக்கான மரங்களை நட்டுள்ளார். பழகுவதற்கு இனிமையானவரான விவேக்கின் மறைவு நம்ப முடியாத ஒன்றாக உள்ளது. திரையுலகினர், ரசிகர்கள் அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கே.பாலசந்தர் இயக்கத்தில் 1987ம் ஆண்டு வெளிவந்த ‘மனதில் உறுதி வேண்டும்’ படத்தில் நடிகராக அறிமுகமானவர் விவேக். தொடர்ந்து பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து சிரிக்க வைத்தவர். அவரது நகைச்சுவை சிரிக்க வைக்க மட்டுமல்ல சிந்திக்க வைக்கும் ஒன்றாக இருந்தது.

ரஜினிகாந்த், அஜித், விஜய், விக்ரம், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார்.

“சொல்லி அடிப்பேன், பாலக்காட்டு மாதவன், நான்தான் பாலா, வெள்ளைப்பூக்கள் ” ஆகிய படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

சின்னக் கலைவாணர் என்று அழைக்கப்பட்டவர் விவேக், பத்மஸ்ரீ விருதையும் பெற்று

நடிகர் விவேக்கிற்கு மனைவியும், இரண்டு பெண்களும் இருக்கிறார்கள். ஒரே மகன் இளம் வயதில் சில வருடங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் காலமானார்.

நடிகர் விவேக் ஆன்மா சாந்தியடைய நாமும் பிரார்த்திப்போம்.

Read Previous

100 % பொழுதுபோக்குடன் வரும் ‘எம்ஜிஆர் மகன்’

Read Next

ஏப்ரல் 17ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்…

Most Popular