கொரானோ நோய் தொற்று காரணமாக கடந்த நான்கு மாதங்களாக இருக்கும் ஊரடங்கு காரணமாக டிவி தொடர் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டிருந்தன.
கடந்த மாதம் மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பமான சில நாட்களில் மீண்டும் ஊரடங்கு விதிக்கப்பட்டதால் ஆரம்பமான படப்பிடிப்புகள் நின்றன.
முழு ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டதால் மீண்டும் டிவி தொடர்களின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடக்க ஆரம்பித்தன.
விஜய் டிவியில் வரும் ஜுலை 27ம் தேதி முதல் மீண்டும் டிவி தொடர்களை ஒளிபரப்ப உள்ளார்கள்.
நேயர்களின் அபிமான தொடர்களான “பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா, ஆயுத எழுத்து, செந்தூரப்பூவே, தேன்மொழிபி.ஏ., ஆகியவை மாலை முதல் இரவு வரை, திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகும்.
மதிய நேரத் தொடர்களான ’ஈரமான ரோஜாவே, பொம்முகுட்டி அம்மாவுக்கு, பொண்ணுக்கு தங்க மனசு, சுந்தரி நீயும் சுந்தரன் நானும், அன்புடன் குஷி” ஆகியவை திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாக உள்ளன.
அவற்றைத் தவிர புதிய தொடரான ‘பாக்யலட்சுமி, மற்றும் ‘நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2’ ஆகிய புதிய தொடர்களும் ஒளிபரப்பாக உள்ளன.
பாக்யலட்சுமி :
பாக்யலட்சுமி, அன்பான அமைதியான தாய். அவளது பிள்ளைகள் மற்றும் கணவன் அவளை ஒரு வேலை பார்க்கும் கருவியாக மட்டுமே பாவித்து வருகின்றனர். அன்புக்காகவும் அங்கீகாரத்திற்காகவும் அவள் ஏங்குகிறாள். அவள் வாழ்வில் ஒரு பேரதிர்ச்சி காத்திருக்கிறது. அதனால் அவள் சில முடிவுகள் எடுக்க நேர்கிறது. அவை என்ன என்பமுமுதஙன ‘பாக்யலட்சுமி’ தொடர்.
நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2:
‘நாம் இருவர் நமக்கு இருவர்’ தொடர் நிறைவடைந்து சீசன் 2 ஆரம்பாக உள்ளது. இதில் மாயன் கதாபாத்திரம் தொடர்கிறது. மாயனாக செந்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ‘சரவணன் மீனாட்சி’ தொடரின் பிரபலம் ரட்சிதா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.