‘ராமையா ஒஸ்தாவையா’ , இந்தப் பெயரை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறது இல்லையா, ஆம், 1955களில் ராஜ்கபூர், நர்கீஸ் நடித்து வெளிவந்த ‘ஸ்ரீ 420’ என்ற சூப்பர் ஹிட் படத்தின் சூப்பர் ஹிட் பாடல்.
முகம்மது ரஃபி, லதா மங்கேஷ்கர், முகேஷ் பாடிய சூப்பர் ஹிட் பாடல் இது.
இந்த பெயரைத்தான் தான் அடுத்து இயக்கும் ஹிந்திப் படத்திற்கு டைட்டிலாக வைத்திருக்கிறார் பிரபு தேவா.
தமிழில் வெற்றி பெற்ற ‘உனக்கும் எனக்கும்’ படத்தை கிரிஷ் குமார், ஸ்ருதி ஹாசன் நடிக்க ரீமேக் செய்து வருகிறார் பிரபுதேவா. டைட்டில் வைக்காமலே படப்பிடிப்பு நடந்து வந்தது.
தற்போது அந்த படத்திற்கு ‘ராமையா ஒஸ்தாவையா’ என்ற தெலுங்குப் பெயரை வைத்திருக்கிறார்கள். இதற்கான முறையான அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார்கள்.
அடுத்த வருடம் ஜுன் மாதம் இந்த படம் வெளிவர இருக்கிறது.