மலையாளத்தில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற படம் ‘சால்ட் அன்ட் பெப்பர்’. இப்படத்தின் மொழிகளுக்கான உரிமையை பிரகாஷ்ராஜ் வாங்கியிருந்தார்.
தற்போது இப்படத்தை தமிழ், தெலுங்கில் இயக்குவதாக உள்ளார். தமிழில் ‘உன் சமையல் அறையில்’ என தலைப்பை வைத்துள்ளார்கள்.
பிரகாஷ்ராஜுடன், சினேகா நடிக்க உள்ளார். ‘தோனி’ படத்திற்குப் பிறகு பிரகாஷ்ராஜ் தயாரித்து, இயக்கப் போகும் படம் இது.
பிரகாஷ்ராஜ் தற்போது ராதாமோகன் இயக்கத்தில் ‘கௌரவம்’ படத்தை தயாரித்து, அதில் நடித்தும் வருகிறார்.
தமிழ், தெலுங்குக்குப் பிறகு இந்த படம் ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்படலாம் எனத் தெரிகிறது.