ஜீவா படங்களில் அதிக பிரின்ட்டுகள்

     கௌதம் மேனன் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், ஜீவா, சமந்தா, சந்தானம் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘நீதானே என் பொன்வசந்தம்’.

இம்மாதம் 14ம் தேதியன்று இப்படம் வெளியாக இருக்கிறது.

உலகம் முழுவதும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது இந்த படம். இளையராஜாவின் இசையில் அருமையான பாடல்கள், படத்திற்கான விளம்பரங்கள், போஸ்டர் வடிவிலும், வீடியோ வடிவிலும் ஏற்படுத்தப்பட்டு ரசிகர்களிடம் ஆவலைத் தூண்டியிருக்கிறது.

இப்படத்திற்காக மிக அதிகமான பிரின்ட்டுகள் போடப்பட்டுள்ளன.  ஜீவா  நடித்த ஒரு படத்திற்காக அதிகமான பிரின்ட்டுகள் போடப்பட்டுள்ளது இதுவே முதல் முறை. இதன் மூலம் புதிதாக ஒரு உச்சத்தை தொட்டிருக்கிறார் ஜீவா.

ஜீவாவின் வளர்ச்சியில் ‘நீதானே என் பொன்வசந்தம்’ ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கும் என்பது உறுதி.

Read Previous

டென்ஷனைக் குறைப்பது காமெடி படங்கள்தான்- ஷங்கர் பேச்சு

Read Next

தென்னிந்தியாவின் ஸ்டார் த்ரிஷா