நீங்கள் படிக்கப் போகும் இந்த செய்தி, ஒரு வித்தியாசமான செய்தி…தவறுதலாக, ஒரு ‘கௌதம்’ புகைப்படத்திற்கு பதிலாக ‘இன்னொரு கௌதம்’ புகைப்படம் வந்ததால் வந்த ஆசை…
விஷயம் என்னவென்றால், இயக்குனர் மணிரத்னம் நடிக்கும் கடல் படத்தில் ஹீரோவாக நடித்து வருபவர் நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம்…மணிரத்னம் இந்த ‘கௌதம்’ புகைப்படத்தை சமீபத்தில்தான் வெளியிட்டார்.
ஆனால் இந்த ‘கெளதம்’ புகைப்டத்திற்கு பதிலாக ‘அப்பாவி’ திரைப்படத்தில் நடித்த சிதேஷ் புகைப்படத்தை பலர் ‘கடல்’ கௌதம் என வெளியிட்டதாக சிதேஷ் தெரிவித்துள்ளார். ஏனென்றால் சிதேஷ், தன்னுடைய இயற் பெயரான கௌதம் என்ற பெயரில்தான் அப்பாவி படத்தில் அறிமுகமாகியுள்ளார்.
இது குறித்து சிதேஷ் தெரிவிக்கையில், “தவறுதலாக என் புகைப்படம் வெளியானலும் எனக்கும் இயக்குனர் மணிரத்னம் படத்தில் நடிக்க ஆசை தான். அதற்கான வாய்ப்பு வந்தால் சந்தோஷம். நான் நடித்த ‘இவனும் பாசக்காரன்’ படத்திற்காக காத்திருக்கிறேன். விரைவில் ரிலீஸ் ஆகவிருக்கிறது. இன்னும் மூன்று படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது,” என்கிறார் அளவு கொள்ளாத ஆசையுடன்..
சீக்கிரமே உங்க ஆசை நிறைவேறட்டும்…