பொங்கலுக்குப் பிறகே ‘பரதேசி’

     தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனர் என பெயரெடுத்த இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பரதேசி’ திரைப்படத்தின் வெளியீடு, அடுத்த மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

அடுத்த வாரம் டிசம்பர் 28ம் தேதி ஏறக்குறைய 10 திரைப்படங்கள் வெளிவரும் சூழல் உள்ளது. இப்படி பல படங்களுடன் பரதேசி படத்தை வெளியிட வேண்டாமென அவர் எதிர்பார்ப்பதாக கோடம்பாக்கத் தகவல்கள் கூறுகின்றன.

பொங்கலுக்கு ‘விஸ்வரூபம், அலெக்ஸ்பாண்டியன், கண்ணா லட்டு தின்ன ஆசையா’ போன்ற  படங்களும் வர உள்ளன. எனவே, பொங்கலுக்கும் வெளியிடுவதை தவிர்த்து விட்டு ஜனவரி கடைசியில் , அதாவது குடியரசு தினமான ஜனவரி 26 அன்று ‘பரதேசி’ வெளியாகலாம் எனத் தெரிகிறது.

 நாம போட்டிருக்கிற புகைப்படத்துல, ‘போறவங்கள்லாம் போங்க, நான் தனியா வர்றன்னு’  பாலா சொல்ற மாதிரி இருக்கு இல்ல…

Read Previous

இன்றைய ரிலீஸ்…

Read Next

குதூகல கொண்டாட்டத்தில் ‘கும்கி’