குதூகல கொண்டாட்டத்தில் ‘கும்கி’

     ‘யானை’யைப் பார்த்தாலே குழந்தைகளுக்கு ஒரு குதூகலம் வந்து விடும். அப்படி ஒரு குதூகலமான கொண்டாட்டத்தில உள்ளனர் ‘கும்கி’ குழுவினர்.

காரணம், படத்திற்குக் கிடைத்திருக்கும் அதிகமான வரவேற்புதான். வெளியான ஒரு வாரத்தில் தமிழகம் முழுவதும் 20 கோடி ரூபாயை இந்த படம் வசூலித்துள்ளதாகச் சொல்கிறார்கள். மேலும் 18 பிரின்ட்டுகள் போடப்பட்டுள்ளன. இன்றுடன் அரையாண்டுத் தேர்வுகளும் முடிவதால், நாளை முதல் இந்த ‘கும்கி ’ யானையை பார்த்து ரசிக்க குடும்பத்துடன்   வருவார்கள் என, படக் குழுவினருக்கு எதிர்பார்ப்பு  அதிகமாகவே இருக்கிறது .

‘மைனா’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் பிரபு சாலமன் இந்த படத்தையும் மாபெரும் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்று விட்டார்.

நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் குடும்ப வாரிசு விக்ரம் பிரபு வின் அறிமுகத்துக்கும் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

இமானின் இசையில் பாடல்களும் இனிமையாக அமைந்துள்ளது.

இப்படி பல விஷயங்களுடன் பையா, வழக்கு எண் 18 9 , வேட்டை வெற்றிப் படங்களைத் தயாரித்த திருப்பதி பிரதர்ஸ்ன் தயாரிப்பும், கும்கி படத்தை வெளியிட்டுள்ள ஸ்டுடியோ க்ரீன் நிறுவனமும் இந்த ‘கும்கி’யின் வெற்றியை மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறார்கள்.

Read Previous

பொங்கலுக்குப் பிறகே ‘பரதேசி’

Read Next

ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம் – திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்