‘பாலிவுட்டின் அடுத்த ஸ்ரீதேவி’ தமன்னா !

himmatwalaமிழில் வெளிவந்த ‘கல்லூரி’ படத்தின் மூலம் ரீ என்ட்ரி ஆன தமன்னா அதன் பின் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையானார்.

திடீரென தமிழ்த் திரையுலகம் அவரை ஒதுக்கினாலும் தெலுங்கில் டாப் ஹீரோயின்களில் ஒருவரானார். அப்படியே பாலிவுட் பக்கமும் கவனம் செலுத்தி தற்போது அஜய் தேவகன் ஜோடியாக ‘ஹிம்மத்வாலா’ படத்தில் நடித்துள்ளார். இன்னும் சில நாட்களில் இந்த படம் வெளியாக உள்ளது. 1983ல் ஸ்ரீதேவி, ஜிதேந்திரா நடித்து வெளிவந்த சூப்பர்  ஹிட் படமான ‘ஹிம்மத்வாலா’ ரீமேக்தான் இந்த புதிய படம்.

இப்படத்தின் இயக்குனர் சஜித் கான் தமன்னாவை பாலிவுட்டின் அடுத்த ஸ்ரீதேவி என சொல்லி ஒரு பரபரப்பை ஏற்படுத்தி விட்டார்.

இது குறித்து தமன்னா கூறுகையில், “ இது மிகப் பெரிய முகத்துதியாக உள்ளது, அதே சமயம் எனக்கு பயமாகவும் உள்ளது. மிகப் பெரிய நட்சத்திரமான ஸ்ரீதேவியுடன் என்னை ஒப்பிட்டுப் பேசுவது பெருமையாக உள்ளது.

இருந்தாலும் அவருடைய நடிப்புடனும், நடனத்துடனும் நான் போட்டி போடவே முடியாது. இயக்குனர் என்ன சொன்னாரோ அதைத்தான் நான் செய்திருக்கிறேன். ஏனென்றால் , நான் இயக்குனர்களின் நடிகை, ” என பதிலளித்து இயக்குனர்களுக்கு இந்த கோடைக் காலத்தில் தலையில் மிகப் பெரிய ஐஸ் மலையையே வைக்கிறார் தமன்னா.

Read Previous

அர்ஜுன் இயக்கும் புதிய படம்…

Read Next

இந்த வாரம் ‘ரிலீஸ்’ வாரம்…