இயக்குனர் ஹரி இயக்கத்தில் கார்த்தி புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை வேந்தர் மூவீஸ் தயாரிக்க இருக்கிறது.
ஆக்ஷன் பட இயக்குனர்களில் முன்னணியில் இருக்கும் ஒருவர் இயக்குனர் ஹரி. இவரது இயக்கத்தில் தமிழ், சாமி, வேல், சிங்கம், ஐயா, ஆறு, தாமிரபரணி ஆகிய வெற்றிப் படங்கள் வெளிவந்துள்ளன.
தற்போது சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா நடிப்பில் ‘சிங்கம் 2’ படத்தை இயக்கி வருகிறார்.
கார்த்தி ஆல் இன் ஆல் அழகுராஜா, பிரியாணி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
வேந்தர் மூவீஸ் எஸ். மதன் தற்போது சிவா, பிரகாஷ் ராஜ் நடிக்கும் ‘தில்லு முல்லு’ படத்தின் ரீமேக்கை தயாரித்து வருகிறார்.
‘சிங்கம் 2’ படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு இயக்குனர் ஹரியும், கார்த்தியும் இந்த புதிய படம் மூலம் இணைகிறார்கள்.
படத்தின் மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.