நயன்தாராவின் ‘ஆறு விரல்’ அதிர்ஷ்டம் !

nayanthara-6தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருப்பது சாதாரண விஷயமல்ல. அப்படி மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருக்கும் ஒருவர் நயன்தாரா.

எத்தனையோ கிசுகிசுக்கள் இவரைப் பற்றி வந்தாலும் இவருடைய இடத்தை இதுவரை எந்த ஒரு ஹீரோயினாலும் பிடிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை.

நல்ல அழகு, நல்ல நடிப்புத் திறமை ஆகியவை நயன்தாராவுக்கு இருந்தாலும், அவருக்கு அதிர்ஷ்டமும் நன்றாகவே இருக்கிறது என்ற பேச்சு உண்டு.

அந்த அதிர்ஷ்டம் அவருடைய ‘ஆறாவது விரல்’ மூலம்தான் அவருக்கு கிடைத்து வருகிறது என்பது தற்போது தெரிய வந்துள்ளது. ‘ஆறாவது விரல்’ ஒருவருக்கு நல்ல அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் என்பது நம் பெரியவர்கள் சொல்லும் ஒன்றாகும்.

நயன்தாராவுக்கு எங்கே ‘ஆறு விரல்’ இருக்கிறது என்று கேட்பவர்களுக்காகவே இந்த செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ள புகைப்படத்தைப் பாருங்கள். (இடது கையில் சுண்டு விரலுடன் ஆறாவது விரல் இருக்கும்).

அப்பாடா….ஒரு பரபரப்பான செய்தியை கொடுத்தாச்சி….

இந்த செய்தி புகைப்படத்தைப் பார்த்ததும் எழுதிய ஒன்று இல்லை என்று சொன்னால் நீங்கள் நம்பவா போகிறீர்கள்……

Read Previous

அஞ்சலி காணாமல் போனதன் காரணம் ‘காதல்’

Read Next

தமிழ்ப் படங்களாக மாறும் ‘டப்பிங் படங்கள்’