சூர்யா நடிக்கும் புதிய படங்கள்…

suryaசூர்யா தற்போது ஹரி இயக்கத்தில் ‘சிங்கம் 2’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் ஒரே சமயத்தில் இரண்டு படங்களில் நடிக்கப் போகிறார்.

ஒன்று கௌதம் மேனன் இயக்கும் படம், மற்றொன்று லிங்குசாமி இயக்கும் படம்.கௌதம் மேனன் இயக்கும் படத்தை போட்டோன் கதாஸ் நிறுவனம் தயாரிக்கிறது.லிங்குசாமி இயக்கும் படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

கௌதம் மேனன் படத்தின் படப்பிடிப்பு ஜுன் மாதத்திலும், லிங்குசாமி படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்திலும் ஆரம்பமாக உள்ளது.

சூர்யா தற்போது நடித்து வரும் ‘சிங்கம் 2’ மே மாதம் வெளியாக உள்ளது.

Read Previous

பி.பி. ஸ்ரீனிவாஸ் மறைவு – முதல்வர் இரங்கல்

Read Next

இந்தியன் போலீஸ் கதை ‘சிங்கம் 2’