அப்பா, மகனை கவர்ந்த தமன்னா…

tamannahதெலுங்குத் திரையுலகில் மூன்று தலைமுறை நடிகர்களைக் கொண்ட குடும்பம் நாகேஸ்வரராவ் குடும்பம். இவருடைய மகன் நாகார்ஜுனாவும், பேரன் நாக சைதன்யாவும் தெலுங்குத் திரையுலகில் பிரபல நடிகர்கள்.

சில வாரங்களுக்கு முன் நடந்த ஒரு விழாவில் மூவருமே, தமன்னாவின் அழகைப் பற்றி புகழ்ந்து பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

சமீபத்தில் நாக சைதன்யா, தமன்னா ஜோடியாக நடித்த ‘தடகா’ என்ற தெலுங்குப் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது. தமிழில் ஆர்யா, மாதவன் நடித்த ‘வேட்டை’ படத்தின் ரீமேக்தான் இந்த படம்.

இந்த படத்தின் பிரமோஷனுக்காக சமீபத்தில் நாக சைதன்யாவின் அப்பாவான நாகார்ஜுனா பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, பத்திரிகையாளர்கள் ‘நாகேஸ்வரராவும், நாகார்ஜுனா – அமலா தம்பதியரின் மகனான அகில் ஆகியோர் படத்தைப் பற்றி என்ன சொன்னார்கள் என்று கேள்வி கேட்டார்கள்.

அதற்கு பதிலளித்த நாகார்ஜுனா, “அகிலுக்கு படம் ரொம்பவே பிடித்தது. அதைவிட அவருக்கு தமன்னாவை அதிகம் பிடித்து விட்டது. தமன்னாவைப் பற்றி நான் ஸ்டாப் ஆக பேசிக் கொண்டேயிருந்தார். அப்புறம்தான் ,  இன்றைய இளம் ரசிர்களை தமன்னா எந்த அளவிற்கு கவர்ந்திருக்கிறார் என்று எனக்கும் புரிந்தது,” என்றார்.

Read Previous

இமயமலையில் சிம்பு…புகைப்படங்களுடன்…

Read Next

சித்தார்த், அனைகா நடிக்கும் ‘காவியத் தலைவன்’