அடுத்த காதல் ஜோடி ஆர்யா – அனுஷ்கா ?

irandam ulagamஇப்போதுதான் சிம்பு – ஹன்சிகா காதல் வெளிச்சத்துக்கு வந்தது.

அடுத்ததாக ஆர்யாவும் அனுஷ்காவும் காதலிக்கிறார்கள் என தமிழ்த் திரையுலகில் ஒரு செய்தி பரவி வருகிறது.

இருவரும் இணைந்து செல்வராகவன் இயக்கத்தில் ‘இரண்டாம் உலகம் ’ என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் நடிக்கும் போதுதான் இருவருக்கும் காதல் தீ பற்றிக் கொண்டாதகக் கூறுகிறார்கள்.

இவர்களது காதல் விவகாரம் இதுவரை வெளியில் தெரியவில்லை என்றாலும், அவர்களது நட்பு வட்டாரத்தில் இவர்களை ஒரு காதல் ஜோடியாகத்தான் பார்க்கிறார்களாம்.

சமீபத்தில் ‘சிங்கம் 2’ படத்தின் வெற்றி பார்ட்டியில் கூட இருவரும் விடிய விடிய ஒன்றாக கலந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆர்யா தனக்கு எப்போது படப்பிடிப்பு இல்லையென்றாலும் உடனே ஹைதராபாத் பறந்து விடுகிறாராம்.

சீக்கிரமா, நீங்களும் உங்க காதலை ட்விட்டர்லயோ, ஃபேஸ் புக்லயோ சொல்லிடுங்கப்பா….

Read Previous

கார்த்தி – ஹரி படம் டிராப் ?

Read Next

‘தலைவா’ திருப்புமுனையாக அமையும் – உதயா