‘தலைவா’ திருப்புமுனையாக அமையும் – உதயா

udhayaதம்பி விஜய் இயக்கியுள்ள ‘தலைவா’ படத்தில் அண்ணன் உதயா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படம் தனக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என உதயா நம்பிக்கையுடன் இருக்கிறாராம்.

அது மட்டுமல்ல விரைவில் மற்றுமொரு பெரிய இயக்குனரின் படத்திலும் உதயா நடிக்கவிருக்கிறார்.

அடுத்ததாக ‘ஆவி குமார்’ படம் வெளியாக இருக்கிறது. இந்த படங்களுக்குப் பிறகு அவர் தொடர்ந்து நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்த இருக்கிறாராம்.

இயக்குனராகும் ஆசையும் உள்ளது,  ஆனால், அது இப்போது இல்லை என உதயாவிற்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நாயகன் என பெயரெடுத்த பிறகுதான் படத்தை இயக்கப் போவதாக உதயா தெரிவித்திருக்கிறார்.

Read Previous

அடுத்த காதல் ஜோடி ஆர்யா – அனுஷ்கா ?

Read Next

இளம் இசையமைப்பாளர்கள் பாடிய ‘பிரியாணி’ பாடல்