ஆந்திரா – போராட்டக்காரர்களிடம் சிக்கிய தமன்னா

tamannah-andhraஆந்திராவை இரண்டு மாநிலங்களாகப் பிரிப்பதற்கு ஒரு பக்கம் எதிர்ப்பும், மறுபக்கம் ஆதரவும் எழுந்துள்ளது.

இந்நிலையில் இன்று விஜயவாடாவில் ஒன்று பட்ட ஆந்திராதான் இருக்க வேண்டும் என்று போராட்டம் நடத்திக் கொண்டிருந்தவர்கள் விஜயவாடா விமான நிலையத்தில் நடிகை தமன்னாவின் காரை வழிமறித்து அவரை முற்றுகையிட்டனர்.

அவரிடம் “சமய்கியாந்திரா” (ஒன்று பட்ட ஆந்திரா) கோஷங்களையும், தெலுங்கு கோஷங்களையும் எழுப்ப வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

அதற்கு தமன்னா, “அனைவருக்கும் வணக்கம், எனக்கு எல்லோருமே ஒன்றுதான். எனக்கு இந்த விஷயத்துல எந்த தொடர்பும் இல்லை. நான் சினிமாவுல நடிக்கிறேன். அது என்னோட வேலை. எனக்கு எல்லோருமே ஒன்றுதான், ” என தெலுங்கிலேயே திரும்பத்  திரும்பச் சொன்னார்.

ஆனாலும், போராட்டக்காரர்கள் ஒரு முறையாவது “சமய்கியாந்திரா’ கோஷத்தை சொல்ல வேண்டும் என அவரை வற்புறுத்தினர்.

பின்னர் காவல் துறையினர் வந்து தமன்னாவை அந்த இடத்திலிருந்து விடுவித்து அழைத்துச் சென்றனர்.

இதனால், அந்த இடத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

Photo Courtesy – ABN Telugu Tv

Read Previous

‘தலைவா’ படத்திற்கு ‘யு’ சர்டிபிகேட்

Read Next

தெலுங்கில் அறிமுகமாகிறார் அர்ஜுன் மகள்..