‘சரவணன் என்கிற சூர்யா’ என்ற படத்தை ராஜா சுப்பையா என்பவர் தயாரித்து, இயக்கி, நடித்து வருகிறார்.
சூர்யாவின் உண்மையான பெயர் சரவணன். தனது பெயரில் இப்படி ஒரு படம் வருவதை சூர்யா விரும்பவில்லை என்றும், இது சம்பந்தமாக நடிகர் சங்கத்தில் முறையிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், ராஜா சுப்பையாவை அழைத்து படத்தின் பெயரை மாற்றுமாறு கேட்டுக் கொண்டாராம். ஆனால், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
“படத்திற்கு ‘சரவணன் என்கிற சூர்யா’ டைட்டில்தான் மிகவும் பொருத்தமாக இருக்கும். எனவே படத்தின் டைட்டிலை மாற்றுவது படத்தையே கைவிடுவதற்கு சமமாகும்,” என ராஜா சுப்பையா தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே ‘ஆர்யா – சூர்யா’ என்ற ஒரு படம் கடந்த மாதம் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.
‘தனுஷ் 5ம் வகுப்பு’ என்ற பெயரிலும் ஒரு படம் தயாராகி வருகிறது.