‘மங்காத்தா’ – ஜெய்க்குப் பதில் நடித்த அஜித்…

jai press meet_00001இந்த செய்தியைப் படித்து அஜித் ரசிகர்கள் யாரும் கோபம் கொள்ள வேண்டாம்.

‘ராஜா ராணி’ படம் வெற்றிகரமாக ஓடுவதை முன்னிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தார் ஜெய்.

அப்போது, அவரிடம் உங்களுக்கும் இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கும் சண்டையாமே என ஒரு நிருபர் கேட்க அதற்கு பதில் அளித்தார் ஜெய்.

“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லைங்க…சண்டைன்னுலாம் சொன்னால் அவர் நேர்ல வந்து அடிப்பார். ‘சென்னை 28, கோவா’ படங்கள்ல நடிச்சதுக்கப்புறம் ‘மங்காத்தா’ படத்துலயும் நான் நடிக்க வேண்டியது.

அஜித் சார் நடிக்கிறதுக்கு முன்னாடி 5 பேர் அதுல ஹீரோ. எனக்குதான் முக்கிய கேரக்டர் கொடுத்தாரு வெங்கட்பிரபு. அப்புறம் அஜித் சார் நடிக்க சம்மதிச்சதும், எனக்கு சொன்ன கேரக்டர்லதான் அஜித் சார் நடிச்சாரு.

ஆனாலும், நான் எப்படியாவது நடிக்கணும்னு அந்த இன்ஸ்பெக்டர் கேரக்டராவது கொடுங்கன்னு கேட்டால். உனக்கே இது ஓவரா தெரியலையான்னு கேட்டாரு.”

இதெல்லாம் கூட பரவாயில்லை, நஸ்ரியவைப் பத்தி என்ன நினைக்கறீங்கன்னு மற்றொரு நிருபர் கேட்டதுக்கு..யார் சார் அவங்க…என பதிலளித்தார் ஜெய்….

நயன்தாரா கூட ஜோடியா நடிக்கும் போது நஸ்ரியாலாம் எப்படி ஞாபகம் இருக்கும்…

Read Previous

என் பெயரில் படமா…சூர்யா ஆவேசம்…

Read Next

ஜி.வி. பிரகாஷ்குமார் நடிக்கும் ‘பென்சில்’