இன்றைய முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ்குமார், ‘பென்சில்’ என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
இயக்குனர் கௌதம் மேனனின் உவியாளராக மணி நாகராஜ் இந்த படத்தை இயக்கவிருக்கிறார்.
12ம் வகுப்பு நடிக்கும் மாணவனாக ஜிவி நடிக்க, அவருக்கு ஜோடியக பிரியா ஆனந்த் நடிக்கிறார்.
மணி நாகராஜ், ஜிவி இருவரும் நெருங்கிய நண்பர்களாம். மணி சொன்ன த்ரில்லர் கதையைக் கேட்டதுமே ஜிவியும் நடிக்க சம்மதித்தாராம்.
ஜிவியே இந்த படத்திற்கு இசையமைக்கவும் செய்கிறார். முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் படத்தில் பணியாற்ற இருக்கிறார்கள்.
‘பென்சில்’ படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்குகிறது.
ஜி.வி. பிரகாஷ்குமார் ‘மதயானைக் கூட்டம்’ என்ற படத்தையும் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இசையமைப்பாளர், தயாரிப்பாளர் இப்போது நடிகர் என பிரகாசமாக பயணிக்கிறார் பிரகாஷ்குமார்.
‘மனைவி வந்த நேரம்…..’.