பாரதிராஜாவால் ‘பொம்மலாட்டம்’ படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டவர் காஜல் அகர்வால்.
அந்த படம் சரியாக ஓடாததால் அப்படியே தெலுங்குப் பக்கம் போனார். சிரஞ்சீனி மகன் ராம் சரண் தேஜாவுடன் நடித்த ‘மகதீரா’ படம் ஓடிய ஓட்டம் அவரை அங்கு முன்னணி நடிகையாக்கியது.
தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களுடனும், பல வெற்றிப் படங்களிலும் நடித்தார். அப்படியே ஹிந்திப் பக்கமும் போய் அங்கும் ஜெயித்தார்.
இருந்தாலும் மீண்டும் தமிழ்ப் பக்கம் வந்து “பழனி, மோதி விளையாடு, நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, அழகுராஜா, ஜில்லா’ ஆகிய படங்களில் நாயகியாக நடித்தார்.
இருப்பினும் பாதிக்குப் பாதி தோல்விப் படங்களாக அமைந்ததால் தமிழில் அதிகமான ரசிகர்கள் அவருக்கு இல்லாமல் போய்விட்டது.
தெலுங்கில் சொல்லவே வேண்டாம். முன்னணியில் இருக்கிறார்.
அதனால்தான், தெலுங்கை மறக்காமல் ,“நான் நடிகையாக இருப்பதற்குக் காரணம், தெலுங்கு திரையுலகம்தான். தெலுங்கை விட்டு நான் போக மாட்டேன். எனக்குக் கிடைச்ச வாய்ப்புகள்ல கடமை தவறாம வேலை பார்த்திருக்கேன், ” என பேசியிருக்கிறார்.
தமிழில் யாரும் அழைக்காத நிலையில் தெலுங்கு வாய்ப்புக்களையாவது தக்க வைக்க முயற்சிக்கவே இந்த பேச்சு.