என்ன இது…வித்தியாசமான தலைப்பா இருக்கே…ஃபேஸ்புக் எப்ப ‘ஜில்லா’ படத்தைப் பாராட்டினாங்க. அவங்க எங்க படத்தைப் பார்த்தாங்கன்னு யாரும் குழம்ப வேண்டாம்.
இது வேற ஒரு சாதனை. அதாவது ‘‘பிரபலங்கள், திரைப்படங்கள், தனிப்பட்ட நபர்கள், நிறுவனங்கள்” அவர்களுக்கென தனிப்பட்ட “ஃபேஸ்புக்” பக்கத்தை வச்சிக்கிறது வழக்கம்.
சமீப காலமா திரைப்படங்களுக்கென தனியா ஃபேஸ்புக் பக்கம் உருவாக்கறதும், அதுல படத்தைப் பத்தின பல தகவல்களை வெளியிடறதும் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கு.
இப்படி ‘ஜில்லா’ படத்துக்காக உருவாக்கப்பட்ட ‘ஜில்லா ஃபேஸ்புக்’ பக்கத்தை இதுவரைக்கும் 7,10,419 பேர் ‘லைக்’ கொடுத்து ஒரு புதிய சாதனை படைக்க வச்சிருக்காங்க.
தென்னிந்திய அளவில இதுவரைக்கும் எந்த ஒரு திரைப்படத்திற்கும் கிடைக்காத ஒரு வரவேற்பு இந்த படத்துக்காக கிடைச்சிருக்கிறத பாராட்டி ஃபேஸ்புக் நிறுவனம் ‘ஜில்லா’ குழுவினருக்கு ஒரு வாழ்த்துக் கடிதத்தை அனுப்பியிருக்காங்க.
5 லட்சத்தை தாண்டும் போதே இது பற்றி விசாரிச்சி, அது உண்மைதான்னு நிரூபணம் ஆனவுடனே ஃபேஸ்புக் பாராட்டியிருக்காங்க.
அதிகமான ரசிகர்கள் கொண்ட எந்த ஒரு தெலுங்குப் படத்துக்கும் கூட கிடைக்காத இப்படிப்பட்ட வரவேற்பு ஒரு தமிழ்ப் படத்துக்கு கிடைச்சிருக்கு.
‘ஜில்லா’ படத்துக்காக தனியா ஃபேஸ்புக் பக்கம் உருவாக்க முடிவு பண்ண உடனே, ஃபேஸ்புக்ல பார்த்தால் ரசிகர்களா உருவாக்கியிருக்கிற எக்கச்சக்கமான ‘ஜில்லா’ பக்கங்கள் இருந்ததாம்.
மோகன்லாலுக்கு யுஎஸ்-ல இருக்கிற ஃபேஸ் புக் நிறுவனத்தோட பரிச்சயம் இருக்கிறதால ரசிகர்களால உருவாக்கப்பட்ட எல்லா ‘ஜில்லா’ பக்கங்களையும் நீக்கியிருக்காங்க.
அதைப் பார்த்து ஃபேஸ்புக் ஆபீஸ்ல இருக்கிறவங்களே ஆச்சரியப்பட்டுப் போனாங்களாம். ஏன் ‘ஜில்லா’ங்கற பேர்ல இவ்வளவு பக்கங்கள் இருக்குன்னு கேட்டிருக்காங்க.
அப்புறமாதான் ‘ஜில்லா’ வோட அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தை உருவாக்கியிருக்காங்க.
இதனால, இன்னைக்கு 7 லட்சத்தையும் தாண்டி ‘ஜில்லா’ பக்கத்தை ரசிகர்கள் விரும்பி ‘லைக்’ கொடுத்திருக்காங்க.
இந்த தகவலையெல்லாம் சொன்னது படத்தோட இயக்குனர் ஆர்.டி. நேசன்.
அசத்துங்க…