ஐஸ்வர்யா ராய் நடிப்பது உண்மைதான் – பி. வாசு

director p vasu

‘ஐஸ்வர்யாவும் ஆயிரம் காக்காவும்’ படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிப்பது உண்மைதான் என்கிறார் இயக்குனர் பி.வாசு.

சில நாட்களுக்கு முன் இயக்குனர் பி.வாசுவிடமிருந்து வந்த பத்திரிகைச் செய்தியில் அடுத்து அவர் இயக்கப் போகும் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கப் போகிறார் என்று குறிப்பிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து அனைத்து மீடியாக்களும் அந்த செய்தியை வெளியிட்டன.

அதற்கடுத்த நாள் அப்படிப்பட்ட படத்தில் நான் நடிக்கவேயில்லை என ஐஸ்வர்யா ராய் மறுப்பு தெரிவித்திருந்தார். அதன் பின் ஐஸ்வர்யா நடிக்காதது பற்றி செய்திகள் வெளியிடப்பட்டன.

ஆனால், முன்னணி நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள இயக்குனர் பி.வாசு , ஐஸ்வர்யா ராய் தனது படத்தில் நடிக்கவிருப்பது உண்மைதான் என பேட்டியளித்துள்ளார்.

“ நான் ஐஸ்வர்யா ராயை சந்தித்ததும், கதை கூறியதும் 100 சதவீதம் உண்மை. கதைதான் அந்தப் படத்தின் ஹீரோ. படம் முழுவதும் நாயகியை சுற்றியே இருக்கும். அந்த வேடத்தில் ஐஸ்வர்யா நடிக்கவிருக்கிறார்.

இது நாயகியை சுற்றியுள்ள கதை என்பதால் நான் நாயகர்களிடம் பேசும்போதும், மற்ற மற்ற தொழில்நுட்ப கலைஞர்களை ஒப்பந்தம் செய்யும்போதும் நாயகி யார் என்று கேட்பார்கள். அதற்காக அளிக்கப்பட்ட முதல் பத்திரிகை செய்தி அது.

இந்தப் படம் படப்பிடிப்புக்கு போக குறைந்தபட்சம் இன்னும் 8 மாதங்கள் ஆகும். அப்படி இருக்கும்போது இப்போதே ஏன் அந்த பத்திரிகைகளுக்கு செய்தியை கொடுத்தீர்கள் என்றுதான் ஐஸ்வர்யா ராய் நினைக்கிறார். படத்துக்கு இன்னும் தேதிகள் ஒதுக்கவில்லையே என்று கேட்டார். நான் அவரிடம் எனக்குரிய காரணங்களை கூறிவிட்டேன்.

அவர் எனது படத்தில் நடிக்கமாட்டேன் என்றோ, எதுவும் முடிவாகவில்லை என்றோ அவர் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடவில்லை.

நான் ரஜினி படங்களையே இயக்கியவன். ஐஸ்வர்யா ராய் பெயரைப் பயன்படுத்தி சம்பாதிக்க வேண்டும் என்கிற அவசியம் எனக்கு இல்லை,” என்று தெரிவித்துள்ளார்.

Read Previous

F – 3 கார் பந்தயத்தில் ‘வா டீல்’ பட லோகோ வெளியீடு…

Read Next

நடிகை ஷகிலா கதை படமாகிறது…?