விஷால் இயக்கத்தில் விஜய் ?

actor-vishal-2003விஷால், ‘பாண்டிய நாடு’ படத்தின் பிரம்மாண்ட வெற்றி மூலம் விட்ட இடத்தை மீண்டும் பிடித்தவர்.

அடுத்ததாக ‘நான் சிகப்பு மனிதன்’ படத்திலும் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்து, அடுத்து வெற்றிக்கு வித்திட்டு வருகிறார்.

திரை உலகில் ஆரம்ப காலத்தில் உதவி இயக்குனராக வேலை செய்தவர், பின் ஒரு நாள் ஹீரோவாக மாறி விட்டார். இருந்தாலும், அவருக்குள் அந்த ‘இயக்குனர்’ கனவு இன்னும் உறங்கிக் கொண்டுதான் இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் வெளியில் வரலாம்.

அப்படி வந்தால், அதில் விஜய் நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இது பற்றிய சமீபத்திய பேட்டி ஒன்றில் விஷால் கூறியதாவது,

“நான் எப்ப கதை யோசிச்சாலும், அந்த கதைக்கு விஜய்தான் என் மனசுல வந்து போவாரு. புதுப்புது இயக்குனர்களுக்கு அவர்தான் நிறைய வாய்ப்புகளை கொடுத்திருக்காரு. இப்ப நான் உதவி இயக்குனரா இருந்து , படம் பண்ணணும்னு ஆசைப்பட்டால் விஜய் வீட்டு கதவைத் தட்டியிருப்பேன்.

அவருக்கு அடுத்து விஜய் சேதுபதிதான் இப்ப நிறைய புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்புத் தர்றாரு. அதனால், விஜய் இல்லன்னா, விஜய் சேதுபதி வீட்டு காலிங் பெல்லை அடிச்சிருப்பேன்,” என்று கூறியுள்ளார் விஷால்.

இன்னும் சில வருடங்களில் விஷாலை இயக்குனராகவும் பார்க்கலாம்…

Read Previous

‘சோலார் ஸ்டார்’ ராஜகுமாரன் மீண்டும் வருகிறார்…

Read Next

விஜய் சேதுபதி நடிக்கும் ‘மெல்லிசை’…