ஆர்யாவுக்குக் கிடைத்த புது ஜோடி…?

actress tamannahதமிழ் சினிமாவைப் பொறுத்தவரை தற்போதைய இளம் ஹீரோக்களில் பொறாமையுடன் பார்க்கப்படுகிறவர் ஆர்யா மட்டுமே.

மற்ற ஹீரோக்களே அவரை அதிர்ஷ்டக்கார ஹீரோ என சொல்லுமளவிற்கு காதல் நாயகனாக வலம் வருகிறார்.

‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ தோல்விப் படத்தைக் கொடுத்ததால் இயக்குனர் ராஜேஷை யாருமே கண்டு கொள்ளாத நிலையில் ,  ’பாஸ் (எ) பாஸ்கரன்’ படத்தின் மூலம் மிகப் பெரிய மாஸ் ஹீரோவாக தன்னை மாற்றிய ராஜேஷுக்கு கை கொடுத்தார் ஆர்யா.

ஆர்யாவின் சொந்தப் படத் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ள ‘பாஸ் (எ) பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் விரைவில் தயாராக உள்ளது.

இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக தமன்னா நடிக்க உள்ளார். இருவரும் ஜோடி சேருவது இதுவே முதல் முறை.

இது பற்றி தமன்னா , “பாஸ் (எ) பாஸ்கரன்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கப் போவதை நினைத்து உற்சாகமாக இருக்கிறேன். அந்த கலகலப்பான நாட்களை எதிர்பார்த்து காத்திருக்கிறேன், ” என கூறியுள்ளார்.

சில வருடங்கள் தமிழ் சினிமாவில் காணாமல் போன தமன்னா , அஜித் ஜோடியாக ‘வீரம்’ படத்தில் நடித்தார். தற்போது, தமிழ் இயக்குனர்களின் பார்வையும், ஹீரோக்களின் பார்வையும் தமன்னாவை நோக்கி உள்ளது.

ஆர்யா ஜோடியாக, அவரின் நெருங்கிய தோழியான,  நயன்தாராதான் நடிக்க உள்ளார் என முதலில் செய்திகள் வெளிவந்தன. ஆனால், தற்போது தமன்னா நடிப்பது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

சபாஷ்…சரியான போட்டி….சாரி….சபாஷ்….சரியான ஜோடி….

Read Previous

விஜய் நடிக்கும் ‘கத்தி’ படத்திற்கு உலகத் தமிழர்கள் எதிர்ப்பு…

Read Next

‘முத்த விவகாரம்’ – விஷால் – யுடிவி இடையே பிரச்சனை…