விஜய் ஜோடியாக ஹன்சிகா…

vijay-and-hansika-in-chimbu-devan-filmவிஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘கத்தி’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கு அடுத்து சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கப் போகிறார்.

இந்த படத்தில் விஜய் ஜோடியாக தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா என பல ஹிந்தி நடிகைகள் நடிக்கப் போவதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால்,  அவையனைத்தும் வதந்திகளாக முடிந்து போயின.

இப்போது விஜய் ஜோடியாக ஹன்சிகா நடிக்கப் போகிறார் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து நமக்கு செய்தி வந்துள்ளது.

விஜய்யுடன் இதற்கு முன் ‘வேலாயுதம்’ படத்தில் ஹன்சிகா ஜோடியாக நடித்துள்ளார். விஜய் போன்றே துறுதுறுவென இருக்க வேண்டும் என பல ஹீரோயின்களை அலசிப் பார்த்து கடைசியாக ஹன்சிகாதான் அந்த கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக இருப்பார் என அவரை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

ஹன்சிகா தற்போது சுந்தர் .சி இயக்கத்தில் ‘அரண்மனை’, சிம்பு ஜோடியாக ‘வாலு’, ஆர்யா ஜோடியாக ‘மீகாமன்’, ஜெயம் ரவி ஜோடியாக ‘ரோமியோ ஜுலியட்’ என தமிழின் முன்னணி ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மீண்டும், விஜய்யுடன் ஜோடி சேர்வதன் மேலும் அவருடைய நட்சத்திர அந்தஸ்து மேலும் உயர வாய்ப்புள்ளது.

இந்த ‘ஜய’ ஆண்டு, யாருக்கு ஜெயமோ இல்லையோ,  ஹன்சிகாவுக்கு ஜெயமான ஆண்டு….

Read Previous

விஜய் சேதுபதி, சுனைனா நடிக்கும் ‘வன்மம்’…

Read Next

தி அமேசிங் ஸ்பைடர் மேன் 2 – சில தகவல்கள்…