பிரசாந்துடன் நடிக்கும் நர்கீஸ் பக்ரி…

Prashanth-Nargis-Fakhri-Saahasam‘ஸ்பை’ எனும் ஹாலிவுட் படத்தில் நடித்து வரும் நர்கீஸ் பக்ரி, பிரசாந்துடன் இணைந்து ‘சாஹசம்’ படத்திற்காக விசேஷ பாடல் காட்சியில் நடனமாட உள்ளார்.

இவர் ஏற்கனவே ரண்பீர் கபூருடன் ‘ராக்ஸ்டார்,’ ஜான் ஆப்ரஹாமுடன் ‘மெட்ராஸ் கபே,’ ஷாகித் கபூருடன் ‘பட்டா போஸ்டர் கிக்லா ஹீரோ’, வருனுடன் ‘மேன் தேரா ஹீரோ’ ஆகிய பிரபலமான சூப்பர் ஹிட் ஹிந்தி படங்களில் கதாநாயகியாக நடித்தவர்.

இந்த பாடல் காட்சியை பிரபலமான நடன இயக்குனர் செய்யவுள்ளார். இந்த நடன காட்சிக்காக பிரம்மாண்டமான செட்டுகள் போடப்பட உள்ளன.

இந்த நடனம் பிரசாந்தின் சாஹசத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைய உள்ளது.

இப்பாடல் காட்சியின் படப்பிடிப்பு விரைவில் நடைபெறவுள்ளது.

Read Previous

ஃபோட்டோ விவகாரம் – ஸ்ருதிஹாசன் வருத்தம்…

Read Next

மீண்டும் தெலுங்கில் த்ரிஷா…