34 ஆண்டுகளுக்குப் பிறகு ‘ஒருதலை ராகம்’ குழுவினர் சந்திப்பு…

oruthalai raagam reunion

34 ஆண்டுகளுக்குப் பிறகு ‘ஒருதலை ராகம்’ படக் குழுவினர் மீண்டும் ஒரு விழாவில் சந்தித்த நெகிழ்ச்சியான நிகழ்வு ஒன்று நேற்று நடைபெற்றது.

1980ம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ‘ஒருதலை ராகம்’ படம் மூலம் தமிழ்த் திரையுலகில் நாயயகனாக அறிமுகமானவர் சங்கர். தொடர்ந்து தமிழ், மலையாளம் என 120க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். ‘ஒருதலை ராகம்’ சங்கர் என அறியப்பட்ட இவர் தற்போது தமிழில் இயக்கியுள்ள படம் ‘மணல் நகரம்’. இதற்கு முன் மலையாளப் படம் ஒன்றை இயக்கியிருக்கிறார்.

‘மணல்நகரம்’ படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா நேற்று ஆர்.கே.வி ஸ்டுடியோவில் நடந்தது.  இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு 34 ஆண்டுகளுக்குப் பிறகு ‘ஒருதலை ராகம்’ படக்குழுவினரை இந்த விழாவில் கலந்து கொள்ளள வைப்பபதன் மூலம் விழாவுக்கு வந்தவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க திட்டமிட்டு இருந்தார் ‘ஒருதலை ராகம்’சங்கர்.

அதன்படி இயக்குநர் டி.ராஜேந்தர், நாயகி ரூபா, நடிகர்கள் தியாகு, தும்பு கைலாஷ், ஒளிப்பதிவாளர் (ராபர்ட்) ராஜசேகரன், பி.ஆர்.ஓ. டைமண்ட் பாபு என ‘ஒருதலை ராகம்’ படக் குழுவினர் மேடையை அலங்கரித்தனர்.

முழுக்க முழுக்க துயாயில் உருவாகியுள்ள ‘மணல் நகரம்’ படத்தை டிஜெஎம் அசோசியேட்ஸ் சார்பில் எம்.ஐ.வசந்த்குமார் தயாரித்துள்ளார். கௌதம் கிருஷ்ணா, ப்ரஜின், தனிஷ்கா, வருணா ஷெட்டி, சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். ரெனில் கௌதம் இசையமைத்துள்ளார்.

‘மணல் நகரம்’ஆடியோவை டி.ராஜேந்தர் வெளியிட்டார் ரூபா பெற்றுக் கொண்டார். விழாவில் பேசிய பலரும் ‘ஒருதலை ராகம்’ படம் பற்றிய மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

சங்கர் பேசும்போது ” நான் ‘ஒருதலை ராகம்’ படத்தில் அறிமுகமாகி 34 ஆண்டுகள் ஆகின்றன. இன்னமும் நான் ‘ஒருதலை ராகம்’சங்கர் தான். அந்தப் படத்தை என் வாழ்நாளில் மறக்க முடியாது. அது என்னைச் சினிமாவுக்கு நாயகனாக அறிமுகம் செய்த படம். அந்தப் பெயரை வைத்துக் கொண்டுதான் இத்தனை காலம் திரையுலகில் இருக்கிறேன். நான் அன்று படத்தில் ரூபாவிடம் பேசியிருந்தால் படமே இல்லை. இன்று இந்த விழாவில் கலந்து கொள்வதற்காகவும், என்னை வாழ்த்துவதற்காககவும் அந்தப் படத்தின் நாயகி ரூபா ஹைதராபாத்திலிருந்து வந்திருக்கிறார்.

‘மணல் நகரம்’ கதையை கேட்டவுடன் துபாயில் பல நாட்கள் எடுக்க வேண்டும் என்று பயந்து கைவிட்டு விடலாம் என்றேன். வேறு கதை செய்யலாம் என்ற போது தயாரிப்பாளர் எம்.ஐ.வசந்த்குமார் பிடிவாதமாக இருந்து ஊக்கம் கொடுத்தார். அதனால்தான் துபாயில் 62 நாட்கள் எடுக்க முடிந்தது,” என்றார்.

 

Read Previous

யு டியூப் ஹிட்ஸ் – சந்தோஷப்பட ஒன்றுமில்லை… – வசந்தபாலன்

Read Next

ஒரே நாளில் பிக்கப், டிராப் – டி.ராஜேந்தர் அதிரடிப் பேச்சு