இலங்கை அரசாங்கத்தின் இணையதளத்தில் தமிழக முதல்வரைப் பற்றிய அவதூறான கட்டுரை வெளியிடப்பட்டகதைக் கண்டித்து, தமிழ்த் திரைக் கவிஞர்கள் சார்பில் மாபெரும் கண்டனக் கூட்டம் வரும் 7ம் தேதி வியாழன் அன்று மாலை 5 மணி அளவில் சென்னை, தியாகராய நகர், சர்.பிட்டி. தியாகராஜர் அரங்கத்தில் நடைபெற உள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள பத்திரிகைச் செய்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவிஅம்மா அவர்களை, ஏழரைக் கோடி தமிழ் மக்களின் ஒப்பற்ற தலைவியை, நாட்டு மக்கள் அனைவருமே அம்மா என்று அன்பொழுக அழைக்கும் தகுதி மிக்க தலைவியை, சிங்களப் பேரினவாத பயங்கரவாத அரசின் சார்பில் வெளியாகும் அதிகாரப் பூர்வமான இணையதளத்தில் ஒரு பெண்ணென்றும் பாராமல் அருவறுக்கத்தக்க வார்த்தைகளால் இழிவுபடுத்தி எழுதிய சிங்களக்காடையர் அரசைக் கண்டித்து தமிழ்த் திரைக்கவிஞர்கள் சார்பில் மாபெரும் கண்டனக் கூட்டம் நடைபெற உள்ளது.
கூட்டத்திற்கு புலவர் புலமைப்பித்தன் தலைமை தாங்குகிறார். இயக்குனர்கள் ஆர்.சி. சக்தி, விக்ரமன், புகழேந்தி தங்கராசு, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொள்கிறார்கள். அவர்களோடு கவிஞர்கள்,
1. முத்துலிங்கம்
2. பழனிபாரதி
3. விவேகா
4. யுகபாரதி
5. கபிலன்
6. இளையகம்பன்
7. அண்ணாமலை
8. நந்தலாலா
9. சொற்கோ
10. இருதயா
11. பிரியன்
12. கலைக்குமார்
13. சிநேகன்
14. பச்சையப்பன்
15. முத்துவிஜயன்
16. பாலமுரளிவர்மா
ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.