ஏ.ஆர்.ரகுமான் இசையில் 3 படங்கள் ரெடி…

AR Rahman Global Concert_00010இந்த ஆண்டைப் பொறுத்தவரையில் ஏ.ஆர்.ரகுமான் ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டமான ஆண்டுதான். அவர் இசையமைத்துள்ள மூன்று திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.

மூன்று படங்களுமே மூன்று விதமான படங்கள். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘லிங்கா’, ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘ஐ’, வசந்தபாலன் இயக்கத்தில் ‘காவியத் தலைவன்’ ஆகிய படங்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

‘ஐ ’ படத்திற்கு கடந்த இரண்டு வருட காலமாகவும், ‘காவியத் தலைவன்’ படத்திற்கு கடந்த ஒரு வருடமாகவும், ‘லிங்கா’ படத்திற்கு கடந்த சில மாதங்களாகவும் இசையமைத்து வருகிறார்.

‘ஐ’ படத்திற்காக படப்பிடிப்பு ஆரம்பமான நாட்களில் போட்டுக் கொடுத்த பாடலைக் கூட வேண்டாமெனக் கூறி, அதற்குப் பதிலாக வேறு ஒரு புதிய பாடலை சில மாதங்களுக்கு முன் போட்டுக் கொடுத்தாராம்.

‘காவியத் தலைவன்’ படத்திற்கு கிளாசிக்கலான அந்தக் கால இசையையும், ‘லிங்கா’ படத்திற்கு ‘மாஸ்’  ஆன இசையையும் ரகுமான் கொடுத்திருக்கிறார்.

இந்த மூன்று படங்களில் ‘காவியத் தலைவன்’ முதலிலும், அதற்கடுத்து ‘ஐ’ படமும் நவம்பர் மாதத்தில் வெளியாக உள்ளன. அடுத்து ரஜினிகாந்த் பிறந்த நாளன்று ‘லிங்கா’ படம் வெளியாக உள்ளது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரகுமான் இசையமைத்துள்ள தமிழ்ப் படங்கள் அடுத்தடுத்து வெளியாகின்றன.

Read Previous

சிவகார்த்திகேயனின் ‘காக்கிச் சட்டை’…

Read Next

Daisy – A Horror Movie..