லிங்குசாமி இயக்கும் இரண்டு படங்கள்…

director lingusamyசூர்யா, சமந்தா நடித்த ‘அஞ்சான்’ படத்தின் தோல்விக்குப் பிறகு வேறு எந்தப் பட அறிவிப்பையும் வெளியிடாத லிங்குசாமி அடுத்து இரண்டு படங்களை இயக்கும் திட்டங்களை வைத்திருக்கிறாராம்.

‘அஞ்சான்’ வெளியீட்டிற்கு முன்னர் அறிவித்தபடி கார்த்தி நடிப்பில் ‘எண்ணி ஏழு நாள்’ படத்தை இயக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளாராம். இந்தப் படத்தையடுத்து விஷால் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

‘சண்டக்கோழி’ படத்திற்குப் பிறகு லிங்குசாமி, விஷால் மீண்டும் இணையும் படம் இது. ‘சண்டக்கோழி’ படம் விஷால் ஒரு ஆக்ஷன் ஹீரோவாக உயரக் காரணமாக இருந்தது.

கார்த்தி நடிக்கும் படம் அனேகமாக அடுத்த மாதம் ஆரம்பமாகலாம் எனத் தெரிகிறது. கார்த்தி தற்போது ‘கொம்பன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் அவர் லிங்குசாமி இயக்கும் படத்தில் நடிப்பார் என்கிறார்கள்.

மீண்டும், ‘பையா, சண்டக்கோழி’ போன்ற வெற்றிகளை இயக்குனர் லிங்குசாமி பெறுவார் என அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கிறார்கள்.

Read Previous

சினிமா நட்சத்திரங்களின் ‘ஸ்டார் பேட்மிண்டன் லீக்‘…

Read Next

‘லிங்கா’வைக் கண்டு பயப்படாத ‘பிசாசு’…