விஜய்யின் ‘புலி’ – பதுங்குமா…பாயுமா…?

vijay puli movie newsசிம்பு தேவன் இயக்கத்தில் விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் மற்றும் பலர்  நடித்து வரும் புதிய படத்திற்கு ‘புலி’ என்று பெயரிட்டிருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் பிரபு, விஜயகுமார், தம்பி ராமையா, சத்யன், இமான் அண்ணாச்சி, கருணாஸ், ஆலி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்திற்கு வேண்டுமென்றே ‘புலி’ என்று தலைப்பு வைத்திருப்பதாகவே பலரும் கருதுகிறார்கள். விஜய் நடித்து இதற்கு முன் வெளிவந்த ‘கத்தி’ திரைப்படத்திற்கு தமிழ் ஆர்வலர்களிடையே கடும் எதிர்ப்பு ஏற்பட்டது.

அதை மனதில் வைத்தே தற்போது அப்படிப்பட்ட ஆர்வலர்களைத் திருப்திப்படுத்த விஜய் ‘புலி’ என்ற தலைப்பைத் தேர்வு செய்திருக்கலாம் என்றும் பேசப்படுகிறது.

மேலும் ‘புலி’ என்ற தலைப்பு உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான தமிழர்களாலும் விரும்பப்படும் வார்த்தையாகவும் அமைந்துள்ளதால் படத்தை  எளிதில் அவர்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க முடியும் என்பதும் ஒரு காரணம்.

இருந்தாலும் ‘புலி’ என்று தலைப்பு வைத்திருப்பதால் இந்தப் படத்தை இலங்கையில் வெளியிட முடியுமா என்பது சந்தேகம்தான்.

மக்களின் உணர்வுகளை திரைப்படங்களில் வியாபாரமாக பயன்படுத்துவது என்பது தற்போது அதிகமாக நடந்து வருகிறது. அதில் தற்போது ‘புலி’ படமும் இடம் பெற்றுள்ளது.

இந்தப் படத்திற்கும் தலைப்பிற்கும் இப்போது யாரும் எதிர்ப்பு சொல்ல மாட்டார்கள். வழக்கம் போல பட வெளியீட்டிற்கு முன் பிரச்சனையை எழுப்பப் போகிறார்கள் என்பதை மட்டும் நிச்சயமாகச் சொல்ல முடியும்.

Read Previous

25வது நாளில் ‘லிங்கா’…

Read Next

‘புலி’ தலைப்பு பற்றி ஸ்ரீதேவி…