விஜய் டிவியில் பொங்கலுக்கு ‘ஜிகர்தண்டா’…

jigarthanda in vijay tv for pongalபொங்கல் திருவிழாவிற்கு இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில் வழக்கம் போல மற்ற தொலைக்காட்சிகளை முந்திக் கொண்டு விஜய் டிவி, பொங்கலுக்கு ஒளிபரப்பாக உள்ள புத்தம் புதிய திரைப்படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டு விட்டது.

பொங்கல் தினத்தன்று விஜய் டிவியில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா மற்றும் பலர் நடித்து 2014ம் ஆண்டு ஜுன் 20ம் தேதி வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய ‘ஜிகர்தண்டா’ திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.

இந்தப் படம், படத்தின் நாயகனாக சித்தார்த்துக்கு பெயரை வாங்கிக் கொடுத்ததை விட படத்தில் வில்லனாக நடித்த பாபி சிம்ஹாவுக்கு மிகப் பெரும் பெயரை வாங்கிக் கொடுத்தது.

இயக்குனர் ஷங்கர், ரஜினிகாந்த் உட்பட இந்தப் படத்தைப் பாராட்டினர். ரஜினிகாந்த் கூட பாபி சிம்ஹா நடித்த ‘அசால்ட் சேது’ கதாபாத்திரம் தன்னுடைய ‘16 வயதினிலே – பரட்டை’ கதாபாத்திரத்தை நினைவுபடுத்துவது போலிருந்தது என்று கூறியிருந்தார்.

பொங்கலுக்கு சர்க்கரைப் பொங்கல், கரும்போடு மேலும் ஒரு இனிப்பாக ‘ஜிகர்தண்டா’ இருக்கப் போகிறது.

Read Previous

‘புலி’ தலைப்பு பற்றி ஸ்ரீதேவி…

Read Next

சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது…