போலீஸ் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி…

ஒரு ஆக்ஷன் கதாபாத்திரத்தில் அதிலும் போலீஸ் கதாபாத்திரத்தில் ஒரு நாயகன் நடிக்கும் போதுதான் அவருடைய இமேஜ் இன்னும் அதிகமாகும். போலீஸ் கதாபாத்திரம் என்றாலே தமிழ் சினிமாவில் நாயகர்களுக்கு தனி அடையாளம் உண்டு.

ஏற்கெனவே, பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி, போலீஸ் கதாபாத்திரத்திலும் தனி அடையாளத்தை ஏற்படுத்தும் விதமாக முதல் முறையாக இப்போது போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தை இயக்கிய அருண்குமார் இந்தப் படத்தை இயக்க உள்ளார். ‘பீட்சா’ படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்த ரம்யா நம்பீசன் மீண்டும் விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்க உள்ளார்.

நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது.

வாசன் மூவீஸ் சார்பில் ஷான் சுதர்சன் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

Read Previous

யூகிக்க முடியாத ‘யூகன்’…

Read Next

‘காக்கா முட்டை’ குழுவினருக்கு தனுஷ் பாராட்டு…