‘கொம்பன்’ படம் எப்படிப்பட்ட ஒரு குடும்பக் கதை, எந்த சாதி பெயரும் குறிப்பிடாத ஒரு சிறந்த படம் என்று படத்தைப் பார்த்த தமிழ்த் திரையுலகங்களின் சங்கங்களைச் சேர்ந்த, பலரும் படம் பார்த்து பாராட்டி, அவர்களது கருத்துக்களை இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் எடுத்துரைத்தனர்.
இந்தப் படத்தை அனைவருமே குடும்பத்துடன் வந்து பார்க்கலாம், பாசம், காதல், கலகலப்பு என அனைத்தும் படத்தில் இருக்கிறது என்று படத்தைப் பார்த்த அவர்கள் நம்மிடமும் கருத்துக்களைத் தனியாகப் பகிர்ந்து கொண்டார்கள்.
ஏப்ரல் 2ம் தேதி வெளியிடுவதாகச் சொல்லப்பட்ட படத்தை தற்போது ஒரு நாள் முன்னதாகவே வெளியிடுவது என இன்று மாலை முடிவெடுத்து அதைத முறைப்படி பத்திரிகையாளர் சந்திப்பிலும் அறிவித்தனர்.
அதன்படி 2ம் தேதிக்குப் பதிலாக நாளை ஏப்ரல் 1ம் தேதியே படத்தை வெளியிடுகிறார்கள்.