சிறப்பான கதைகளை தேர்வு செய்யும் விஷ்ணு விஷால் இம்முறை தேர்வு செய்து நடித்துள்ள த்ரில்லர் படம் தான் 'எப்ஐஆர்'.

அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் தீவிரவாதத்தை மையமாக வைத்து இப்படத்தை இயக்கியுள்ளார்.

விஷ்ணு விஷால், இர்பான் அகமது என்ற ஐஐடி முடித்த ஒரு இளைஞராக நடித்துள்ளார். இவரின் அம்மா திருவல்லிக்கேணி சப் இன்ஸ்பெக்டராக இருக்கிறார். 

ஒரு சிறிய கெமிக்கல் கம்பெனியில் பணிப்புரிகிறார். வேலை விஷயமாக ஐதராபாத் செல்கிறார். தீவிரவாதி என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரை என்ஸ்ஐ கைது செய்கிறார்கள்.

இவர் தீவிரவாதியா இல்லையா, அவருக்கு வரும் இன்னல்களை எப்படி சமாளிக்குறார் என்பது தான் மீதி கதை.

விஷ்ணு விஷால் தன் கதாபாத்திரத்தை நன்கு உள்வாங்கி நடித்துள்ளார்.

படத்தில் மூன்று கதாநாயகிகள், ஆனால் அதில் ரைசா வில்சன் கதாபாத்திரத்துக்கு மட்டும் தான் முக்கியத்துவம் உள்ளது. என்ஸ்ஐ தலைவர் கதாபாத்திரம் வழியாக தன் நடிப்பு திறமையை வெளிக்காட்டியுள்ளார், கவுதம் மேனன்.

இப்படத்தின் இறுதியில் உள்ள ட்விஸ்ட்யில் மட்டும் தான் முழு கதையின் சுவாரசியம் அமைந்துள்ளது.