கார்த்திக் சுப்புராஜின் மற்றொரு கேங்ஸ்டர் படம் தான் 'மகான்'. விக்ரமின் திறமையான நடிப்பால் 'காந்தி மகான்' கதாபாத்திரம் நன்றாக அமைந்துள்ளது. 

பள்ளி வாத்தியராக இருக்கும் விக்ரம் தனது 40வது பிறந்தநாளை கொண்டாட விரும்புகிறார்.

அதன் விளைவாக விக்ரமின் மனைவி சிம்ரன் அவரை விட்டு பிரிந்து செல்கிறார். மனைவி மகனை பிரிந்த சோகத்தில் இருக்கும் விக்ரம், தன் நண்பன் பாபி சிம்ஹாவுடன் சேர்ந்து சாராய வியாபாரம் தொடங்குகிறார். இருவரும் சேர்ந்து சாராய சாம்ராஜ்யத்தை உருவாக்குகிறார்கள்.

தந்தை விக்ரமை பழி வாங்குவதற்காக மகன் துருவ் விக்ரம் சிறப்பு போலீஸ் அதிகாரியாக வருகிறார். மகன் தன் தந்தையை பழி வாங்குகிறாரா என்பது தான் மீதி கதை.

தந்தை மகன் வரும் காட்சிகள் சுவாரசியமாக அமைத்துள்ளது. மற்ற கதாபாத்திரங்களும் இப்படத்தில் சிறப்பாக நடித்துள்ளனர். பாபி சிம்ஹாவின் மகனாக நடித்த  சனந்த், தன் கதாபாத்திரத்தில் நன்றாகவே நடித்துள்ளார். சிம்ரன் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இல்லை. சந்தோஷ் நாராயணனின் இசை படத்திற்கு பொருத்தமாக இருக்கும்.

ஒளிப்பதிவாளர் ஷ்ரேயாஸ் கிருஷ்ணா, கலை இயக்குனர் மோகன் படத்தில் இரு தூண்கள்.மொத்தத்தில் ஓடிடி தளத்திற்கு சரியாக அமைந்துள்ள படம் 'மகான்'.