வடிவேலு, பகத் பாசில் நடிக்கும் ‘மாரீசன்’, ஜுலை 25 வெளியீடு

06 Jul 2025

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான வடிவேலு மற்றும் பகத் பாசில் இணைந்து நடித்திருக்கும் 'மாரீசன்' திரைப்படம் வரும் ஜூலை 25ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது என படக்குழு உற்சாகத்துடன் அறிவித்துள்ளது.

சுதீஷ் சங்கர் இயக்கத்தில், வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றிய இந்தப் படத்தில் வடிவேலு, பகத் பாசில், கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி.எல். தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவணா சுப்பையா, கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவை கலைச்செல்வன் சிவாஜி கையாண்டுள்ளார், யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை ஸ்ரீ ஜித் சாரங் மேற்கொள்ள, கலை இயக்கத்தை மகேந்திரன் கவனித்துள்ளார்.

கிராமிய பின்னணியில், பயணத் திரில்லராக உருவாகியுள்ள இந்தப் படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரி தயாரித்துள்ளார். E4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ் இப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியூசராக பணியாற்றியுள்ளது. ஏற்கனவே வெளியான படத்தின் டீசர் 4 மில்லியன் பார்வைகளைப் பெற்று, படத்திற்கான எதிர்பார்ப்பை உயர்த்தியுள்ளது.

'மாமன்னன்' படத்திற்குப் பிறகு வடிவேலு-பகத் பாசில் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதாலும், டீசரில் இருவரின் நடிப்பு பிரமிக்க வைத்திருப்பதாலும், ரசிகர்கள் மற்றும் திரையுலக வணிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு பெரும் ஆவல் ஏற்பட்டுள்ளது.

Tags: mareesan, vadivelu, fahad fazil

Share via: